தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் பங்கை எரிப்பேன் என மிரட்டிய சட்ட மாணவன் கைது! - Law student arrested for threatening to burn petrol bunk

சென்னை: தண்டையார் பேட்டை பகுதியில் தீக்குச்சியை பற்ற வைத்து பெட்ரோல் பங்கை எரிப்பேன் என மிரட்டிய எல்.எல். பி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட மாணவன் கைது
சட்ட மாணவன் கைது

By

Published : Nov 11, 2020, 4:13 AM IST

சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் உதய சூரியன் முதல் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரின் மகன் உதயபாஸ்கர்(26. இவர் ஆந்திராவில் எல்.எல்.பி படித்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு பைக்கிற்கு பெட்ரோல் போடுவதற்கு தண்டையார் பேட்டை பெட்ரோல் பங்கிற்கு சென்றார். அங்கு தாமதமானதால் வத்திக்குச்சியை கிழித்து பெட்ரோல் பங்க் மீது போட்டார்.

அந்த வத்திக்குச்சி தீயை ஊழியர்கள் அணைத்து விட்டனர். ஆனால், உதயபாஸ்கர் நாளையும் வந்து உங்கள் பெட்ரோல் பங்கை கொளுத்தாமல் விட மாட்டேன் என தெரிவித்தார். இது தொடர்பாக, பங்க் கண்காணிப்பாளர் பாலதண்டாயுதம்(58) என்பவர் புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.காவல்துறையினர் உதயபாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details