சென்னை: தமிழ்நாட்டில் காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு அரசு, தனியார் துறையில் வேலைக்கு அமர்த்த உதவுவதற்காக, காவல் துறை தலைமை இயக்குநர்அலுவலகத்தில் காவலர் நலப்பிரிவு சார்பில், 'காவல் பணியாளர்களின் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு பரிமாற்றம்' என்ற பெயரில் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
காவலர் நலத் துறை மூலம் காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தத் தனிப்பிரிவை உருவாக்கியதன் மூலம் அவர்களின் குழந்தைகள் வேலைவாய்ப்பின்றி மன அழுத்தத்தில் இருப்பதையும், தங்களுக்கு ஏற்ற வேலைகளைத் தேடுவதில் உள்ள சிரமங்களைக் குறைப்பதுமே முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.