முதலமைச்சரை சந்தித்தப் பின் செய்தியார்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த் கூறியதாவது:
குழந்தைகளைக் கண்காணிப்பதற்கான மாநில அளவிலான தனிக்குழு ஒன்று அமைத்திட வேண்டும் என்பது குறித்து இன்று முதலமைச்சரை சந்தித்து வந்துள்ளேன். இது குறித்து முதலமைச்சர் எங்களுக்குத் தெரியாத பல தகவல்களைத் தெரிவித்தார்.
இந்தச் சமூகமும் பெற்றோர்களும் பரப்பான வாழ்க்கையில் குழந்தைகளை கவனிக்க இயலாத சூழ்நிலையில் அவர்களை மட்டுமே கவனிக்கும் வகையில் ஒரு தனிக்குழு அமைத்திட வேண்டும். அதில் மருத்துவம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் இருத்தல் வேண்டும்.