சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், அயன், கவண் போன்ற வெற்றி படங்களைத் தந்தவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். இவர் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி கரோனா காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று (அக்.30) மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் பிறந்தநாள். அவரது நெருங்கிய நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் கூறுகையில், " நேற்று நண்பர் கே.வி.ஆனந்தின் பிறந்த நாள். அவர் மறைந்து சரியாக அரையாண்டு கழித்து அவரின் நண்பர்கள் கூடி அவரின் நினைவுகளை பகிர்ந்துகொண்டோம்.
உருக்கமான பதிவு
சூர்யா, ஹாரிஸ்ஜெயராஜ், ஆண்டனி, சுபா, எம்.எஸ்.பிரபு, ராகவன், ராம்ஜி, பாலமுருகன், கிரண், ஜெகன், கபிலன் வைரமுத்து என்று கலந்துகொண்டு பேசிய அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு பேசினர். பி.சி.ஸ்ரீராமும், திருவும் ஊரில் இல்லாததால் வீடியோ மூலம் பேசினார்கள். ஆனந்தின் உதவியாளர்கள் இணைந்து தயாரித்திருந்த வீடியோ பதிவின் அஞ்சலி மேலும் நெகிழ்த்தியது. ஒருங்கிணைத்த ஜெகன் நிறைய அனுபவங்கள் சொன்னார்.