சென்னை:எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நேற்று (ஜன 28) நடைபெற்ற கலந்தாய்வில், 2021-ல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 212 பேரும், இதற்கு முந்தை ஆண்டுகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 329 மாணவர்களும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று, அதிக இடங்களை 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மூலம் பெற்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு கலந்தாய்வுக்கு, 762 பேர் அழைக்கப்பட்டத்தில், 739 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். 23 பேர் மருத்துவ கலந்தாய்விற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 198 பேர் காத்திருப்பில் உள்ளனர்.
7.5 சதவீத இடஒதுக்கீடு கலந்தாய்வின் படி எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான அரசு மருத்துவ கல்லூரியில் சேர 318 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. இஎஸ்ஐசி கல்லூரியில் 6 பேருக்கும், சுயநிதி கல்லூரி சேர 113 பேருக்கும் சேர்க்கை ஆணை வழங்கபட்டுள்ளது. அரசு பிடிஎஸ் கல்லூரியில் சேர 13 பேருக்கும், சுயநிதி பிடிஎஸ் கல்லூரியில் சேர 94 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது.