மாத ஊதியம் வாங்குபவர்கள், ஓய்வூதியதாரர்கள், சுய தொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள் உள்ளிட்ட வருமான வரி செலுத்துபவர்கள் 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்; மீறினால் அபராதம்! - வருமான வரி
சென்னை: சென்ற நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
அவ்வாறு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் வருமான வரி சேவை மையங்கள் இன்று திறந்திருக்கும் என்றும், வருமான வரி செலுத்துபவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறும் வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இன்றுக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று கூறியுள்ள வருமானவரித்துறை, இன்று கட்ட தவறுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.