சென்னை:10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு கலந்து கொள்ள வரும் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், மார்ச் - 9-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
செய்முறை பயிற்சி வகுப்பு
மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பின், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்குப் பதிவு செய்ததுடன், மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப் பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்து விட்டு, மே 2022 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்விற்கு மார்ச்- 9ஆம் தேதி முதல் 16 ந் தேதி வரை அறிவியல் பாடம் கருத்தியல் உட்பட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கும் (அனைத்து / தவறிய பாடங்கள்) சேவை மையங்களின் மூலம் தனியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
என அறிவிக்கப்படுகிறது.