சென்னை:பாஜகவில் சமீப காலமாக ஆடியோ விவகாரம் மூலம் உட்கட்சிக்குள் மோதல் ஏற்பட்டு, கட்சியில் இருந்து பலர் விலகுவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவியாக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் விலகினார்.
"பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" எனக் கூறி அண்ணாமலை மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதற்குப் பதில் அளித்த நடிகை குஷ்பூ, "பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது" எனக் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜவில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.