சென்னை:வ.உ. சிதம்பரனாரின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்தியில், வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது வாழ்வை இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்து, மகத்தான தியாகங்களைச் செய்தவர். தற்சார்பு பெற்ற சுதந்திர இந்தியாவுக்காக அவர் பாடுபட்டவர்.
வணிகப் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் ஏகபோக உரிமையை முறியடிக்க முதல் உள்நாட்டு நீராவிக் கப்பல் நிறுவனத்தை நிறுவினார். வங்காளத்தைப் பிரிப்பதன் மூலம் இந்தியச் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் ஆங்கிலேயர்களின் கொள்கைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கத்தை அணி திரட்டினார். அதற்காக, கடுமையான சிறைவாசம் அனுபவித்தார்.