தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச லேப்டாப் - மாணவர்களுக்கு குட் நியூஸ்

2017-18ஆம் ஆண்டு பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

By

Published : Sep 6, 2021, 1:55 PM IST

சென்னை: 2017-18 ஆம் ஆண்டு பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வி.பி.நாகைமாலி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, " 2011ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-12 முதல் 2019-20 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் 45 லட்சத்து 71 ஆயிரத்து 675 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இதற்காக 6349.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மூலம் லேப்டாப்

2017 -18ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், சேலம், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்ல மடிக்கணினிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் பயின்ற மாணவர்களில் தற்போது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் அத்தாட்சி அடிப்படையில் மடிக்கணிகள் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படிப்படியாக வழங்கப்படும்

2020-21ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு பயின்ற 4 லட்சத்து 97 ஆயிரத்து 28 மாணவர்களுக்கு இன்றும் மடிக்கணினிகள் கொடுக்கப்படவில்லை. தற்போது 2021-22ஆம் கல்வியாண்டியில் 11ஆம் வகுப்பு படிக்கும் தோராயமாக 5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய நிலுவை 1 லட்சத்து 75 ஆயிரத்து 789 என மொத்தம் 11 லட்சத்து 72 ஆயிரத்து 817 மடிக்கணிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

இதற்கான அனைத்து பணிகளும் முடிப்பதற்கான நிர்வாக அனுமதி வழங்குவதற்கு பூர்வாங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி மடிக்கணிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் " என்றார்.

இதையும் படிங்க: 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details