சென்னை:தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் செல்போன், லேப்டாப் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் எட்வின். இவர், கடையை திறந்து வைத்து விட்டு கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடைக்குள் புகுந்து அங்கிருந்த மடிக்கணினியை திருடிச் சென்றுள்ளார். எட்வின் வந்து பார்த்தபோது கடையிலிருந்த மடிக்கணினி திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக எட்வின் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தார்.
சிசிடிவி மூலம் விசாரணை