தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களுக்கு லேப்டாப் இலவசம் - laptop

தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் சேரும் மாணவா்களுக்கு லேப்டாப் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது..

Laptop free for students  free laptop  dermatology students  Laptop free for dermatology students  இலவச லேப்டப்  தோல் தொழில்நுட்பப் பயிலகம்  தோல் தொழில்நுட்பப் படிப்பு  மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி  மத்திய பாலிடெக்னிக் கல்லூரி  laptop  மடிக்கணினி
Laptop

By

Published : Sep 4, 2021, 12:19 PM IST

தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் சேரும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வள பட்டயப் படிப்புகளுக்கான சோ்க்கை வரும் 9ஆம் தேதிவரை நேரடி முறையில் நடைபெறுகிறது.

மூன்றரை ஆண்டுகால மீன்வள பட்டயப் படிப்பை முடித்த பின்னா், மீன் வளா்ப்பு பண்ணை, இறால் வளா்ப்பு, கடல் உயிரின உற்பத்தித் திறன், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவுகளில் பணிபுரிய முடியும். இது தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளம் மூலமாகக் காணலாம்.

அதேபோல், தரமணி வளாகத்தில் உள்ள தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் தோல் தொழில்நுட்பவியல் சார்ந்த மூன்று ஆண்டு ஆறு மாதப் பட்டயப் படிப்பிற்கு வரும் 9ஆம் தேதி வரையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகின்றது. மேலும் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வசதி, மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள்: பிரதமர் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details