டொயோட்டா நிறுவனத்தின் தமிழ்நாடு டீலரான லான்சன் டொயோட்டா நிறுவனத்தை 2000ஆம் ஆண்டு லங்காலிங்கம் என்பவர் நிறுவினார். கோயம்பேட்டிலிருந்து தொடங்கிய இந்த நிறுவனத்தின் முதல் கிளை மாநிலம் முழுவதும் விறுவிறுவென பரவியது. 60 ஆயிரம் வாடிக்கையாளர்களைக் கொண்ட பிரமாண்ட தொழில் நிறுவனமாக லான்சன் உருவெடுத்திருந்தது.
இந்த நிறுவனத்தின் இணை இயக்குநராக லங்காலிங்கத்தின் மனைவி ரீட்டா லங்காலிங்கம் இருந்துவந்தார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர். இதில் லாவண்யா சுவிட்சர்லாந்தில் வசிக்கும் நிலையில், லிவாஸ் திருமணமாகி குடும்பத்துடன் சென்னை ஈ.சி.ஆர். சாலையில் குடியிருந்துகொண்டு தொழிலை கவனித்துவருகிறார்.
தற்கொலை செய்துகொண்ட ரீட்டா லங்காலிங்கம் இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை இவர்களின் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நலிவு, இவர்களின் தொழிலையும் ஆட்டி படைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இரு தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் அனைத்து கிளை மேலாளர்களுடன் ரீட்டா லங்காலிங்கம் சென்னையில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அப்போது மேலாளர்களை இவர் கடுமையாகத் திட்டியதாகவும், அதனால் கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் அறையில் ரீட்டா லங்காலிங்கம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது பணியாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரீட்டாவின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நுங்கம்பாக்கத்தில் ரீட்டா வீடு அமைந்துள்ள பகுதி ‘காபி டே’ சித்தார்த்தா, ரீட்டா என பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் பெரு நிறுவன முதலாளிகளின் அடுத்தடுத்த தற்கொலைகள் புதிய இந்தியா மக்களுக்கு என்ன சொல்லவருகிறது என்ற பெரும் கேள்வி பொதுத்தளங்களில் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது.