புதுச்சேரியில் 16 இடங்களைக் கைப்பற்றி என்.ஆர். காங், பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து மாநில முதலமைச்சராக என்.ஆர்.காங், கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.
தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவி ஏற்பு! - புதுச்சேரி மாநில செய்திகள்
புதுச்சேரி: தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
![தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவி ஏற்பு! Lakshmi Narayanan sworn in as caretaker Speaker](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:33:43:1622005423-tn-pud-03-speaker-swearing-tn10044-26052021100536-2605f-1622003736-1007.jpg)
Lakshmi Narayanan sworn in as caretaker Speaker
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, சென்னையிலுள்ள ஓர் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். பின்னர், புதுச்சேரி திலாசுப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதற்கிடையில், மாநிலத்தின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.