சென்னை:தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமாக இருந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான முரளிதரன் (65), மாரடைப்பால் உயிரிழந்தார். கும்பகோணத்தில் நாச்சியார் கோயிலுக்கு சென்றிருந்தபோது சரியாக 1:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதால் முரளிதரன் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் மிகப் பிரபலமாக உலா வந்தது லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இதில் நிர்வாகிகளாக முரளிதரன், வேணுகோபால், சாமிநாதன் இருக்கின்றனர். 1994-ல் “அரண்மனை காவலன்” படம் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்த முரளிதரன், பல வெற்றிப் படங்களை தயாரித்தார்.
இவர் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா ஆகியோரை வைத்து அன்பே சிவம், வீரம் விளைஞ்ச மண்ணு, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, வேலுச்சாமி, ப்ரியமுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, புதுப்பேட்டை, சிலம்பாட்டம் ஆகிய மிகப்பெரிய வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட திரையுல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக கவுன்சிலர் மரணம்: நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இபிஎஸ்!