ஆவடி சிறப்பு ஆயுதப்படை போலீசில் பெண் போலீசாக பணியாற்றியவர் பாக்யஸ்ரீ(வயது 28). இவருடைய கணவர் முரளி. இவர், தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு கௌசிக்(5), நவ்சிக்(2) என 2 மகன்கள் உள்ளனர்.
திருவொற்றியூர் மதுரா நகரில் வசித்துவந்த முரளியின் தந்தை கடந்த 2 நாட்களுக்கு இறந்து விட்டார். இதனால் முரளி, தனது மனைவி பாக்யஸ்ரீ மற்றும் மகன்களுடன் திருவொற்றியூர் மதுரா நகரில் வந்து தங்கியிருந்தார்.
நேற்று காலை பாக்யஸ்ரீ, வீட்டின் மாடிக்கு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த முரளி, மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு தனது மனைவி பாக்யஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.