கோயம்பேட்டில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் 570 எண் கொண்ட வழித்தட பேருந்து, நேற்றிரவு வடபழனிக்கு பணிமனைக்கு திரும்பும்போது, சாலையில் நின்று கொண்டிருந்த விருகம்பாக்கத்தை சேர்ந்த மீனா(48) என்ற பெண் மீது மோதியது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த மீனா வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.