சென்னை தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்ற புகார் மனுவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம் அளித்தார்.
பின்னர் இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் போதிய நம்பகத்தன்மை இல்லை.
அந்த அறையை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு தன்னிச்சையாகவே செயலிழப்பது, இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கன்டெய்னர் லாரிகள் வருவது, இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு லேப்டாப்புடன் நபர்கள் வருவது உள்ளிட்டவை அச்சத்தை ஏற்படுத்தியது. வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பதற்கான விதிமுறைகளை சரியாகப் பின்பற்றப்படவில்லை.