தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெற்றதற்கு தொ.மு.ச வரவேற்பு! - தொமுச வரவேற்பு

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றதை தொமுச வரவேற்பதாக, தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

SHANMUGAM
வேலை

By

Published : May 1, 2023, 2:31 PM IST

சென்னை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்த மசோதா கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இருந்தபோதும், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதா பேரவையில் நிறைவேறியது. இந்த சட்டத்திருத்த மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, கடந்த 24ஆம் தேதி, 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு தொழிற்சங்கங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, 12 மணி நேர வேலை மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த சட்ட மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என அனைத்து தொழிற்சங்களும் வலியுறுத்தின.

இந்த நிலையில், இன்று(மே1) தொழிலாளர் தினத்தையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவுச் சின்னத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், "12 மணி நேர வேலை தொடர்பான சட்டத்திருத்தம் திரும்பப் பெற்றதற்கு தொமுச வரவேற்பு தெரிவிக்கிறது. தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பணி நேரத்தை நீட்டிப்பதாக தெரிவித்து இருந்தார்கள். அந்த சட்டம் குறித்து உடனடியாக முதலமைச்சரிடம் பேசினோம். அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசியபோது, இந்த சட்டம் வேண்டாம் என்று தெரிவித்து இருந்தோம். இதனால், அந்த சட்டத்தை திரும்ப பெற்று இருக்கிறார் என்றால், அவர் தொழிலாளர்கள் உரிமையை பேணி காப்பார் என்று நம்புகிறோம். தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: MK Stalin: 12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details