தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்திரையிடாத எடையளவுகளை கூடுதல் கட்டணமின்றி மறு முத்திரையிட்டுக் கொள்ளலாம் - எடை முத்திரை

உரிய கால இடைவெளியில் மறுபரிசீலனை செய்து முத்திரையிடப்படவேண்டிய எடைகள், அளவைகள் உள்ளிட்டவற்றிற்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கூடுதல் கட்டணமின்றி மறு முத்திரையிட்டுக்கொள்ளலாம் என தொழிலாளர் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

labour department press statement
முத்திரையிடாத எடையளவுகளை கூடுதல் கட்டணமின்றி மறு முத்திரையிட்டுக் கொள்ளலாம்

By

Published : Jun 28, 2021, 10:44 PM IST

சென்னை:இது தொடர்பாக தொழிலாளர் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,பல்வேறு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் உரிய கால இடைவெளியில் மறுபரிசீலனை செய்து முத்திரையிடப்பட வேண்டிய எடைகள், அளவைகள், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் தராசுகள், எடைப்பாலங்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பம்புகள், எரி பொருள்கள் கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் இதர எடையளவுக் கருவிகள் ஆகியவற்றை மாநிலம் தழுவிய ஊரடங்கு காரணமாக உரிய காலத்தில் மறுமுத்திரையிட இயலவில்லை என்று பல்வேறு தொழில் நிறுவனங்கள், சங்கங்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றுள்ளது.

தொழில் நிறுவனங்கள், சங்கங்களின் கோரிக்கையினை பரிசீலித்து ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 உடன் முடியும் காலாண்டில் மறு பரிசீலனை செய்து முத்திரையிடாத எடையளவுகளை அந்தந்த பகுதியிலுள்ள சட்டமுறை எடையளவு ஆய்வாளர்கள், சட்டமுறை எடையளவு உதவிக்கட்டுப்பாடு அலுவலர்களிடம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி மறு முத்திரையிட்டுக்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை'- அரசின் திட்டத்தை விமர்சித்து ஓபிஎஸ் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details