இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெறுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135Bஇன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள், வர்த்தக நிறுனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதியன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்தல் வாக்குபதிவு நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை! - labor welfare order to paid leave for all employees on April 6th news
சென்னை: தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதியன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்கவேண்டும் எனவும் அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...முதலமைச்சரின் ஷாக் நியூஸ் முதல் துரைமுருகனின் கலாய்வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்