பாஜகவின் மூத்த தலைவரும், மத்தி உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார்.
பின்னர் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, மாநிலத் தலைவர் எல். முருகன், இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், குஷ்பு, கெளதமி, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது அமித் ஷாவிற்கு பாஜக மாநிலத் தலைவர் முருகன் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், "தமிழ்நாடு அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. பாஜக எங்கு எனக் கேட்டவர்கள் தற்போது எல்லா பக்கமும் பாஜக கட்சியை பார்த்து வருகின்றனர். மோடியின் ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர்.