சென்னை தி. நகரில் உள்ள கமலாலயத்தில் 1 லட்சம் முகக்கவசங்கள் அரசிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். இன்று 1 லட்சம் முகக்கவசங்களை அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம்.
புதிய அரசு ஆட்சி அமைத்து 30 நாட்கள் கடந்துவிட்டது. பல தாய்மார்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வருகிறது,
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் மாதம் 1000 கொடுப்போம் என்று கூறினார்கள் ஆனால் அதனை தற்போது வரை கொடுக்கவில்லை. எனவே தேர்தல் அறிக்கையில் கூறிய தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும்.