சென்னை: சாஸ்திரி பவனில், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டில் 246 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழ்நாடு மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் சிறைபட்ட மீனவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு தர மறுக்கிறது.
246 கோடி முறைகேடு
'ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 246 கோடி முறைகேடு' மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 6,255 கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் மீதான தாக்குதல்
திமுக ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்று பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க:பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை; வேதனையை போக்கிய ஸ்டாலின்