தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மு.க. அழகிரி பாஜகவில் இணைய வந்தால் வரவேற்போம் - எல் முருகன்! - MK Alagiri

சென்னை: மு.க. அழகிரி பாஜகவில் இணைய வந்தால் நாங்கள் கண்டிப்பாக வரவேற்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன்
தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன்

By

Published : Nov 17, 2020, 2:23 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சியின் முன்னேற்றம், செயல்பாடுகள் குறித்து பேசுவதற்காக தமிழ்நாடு வருகிறார். அவர் வருகிறார் என்றவுடம் எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. இந்த வேல் யாத்திரையின் மூலம் கலவரம் வெடிக்கும் என எதிர்க்கட்சிகள் கூறினார்கள், ஆனால் இதுவரை எந்த கலவரமும் வரவில்லை.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன்

மு.க அழகிரியுடன் இதுவரை நாங்கள் பேசவில்லை, அவரும் எங்களிடம் இதுவரை பேசவில்லை. அதேசமயம் அவர் பாஜக-வில் இணைவதாக கூறினால் நாங்கள் கட்டாயம் அதனை வரவேற்போம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மனம் புண்பட்ட பக்தர்களை ஆறுதல்படுத்தவே வேல் யாத்திரை'- எல். முருகன்

ABOUT THE AUTHOR

...view details