சென்னை:தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி உயர்வு மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனிடையே, பல்லாவரம் அடுத்த பம்மலில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் தலைமையில் மக்கள் பெரிதும் பாதிக்கக் கூடிய விலைவாசி உயர்வைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்பப்பெறவேண்டி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேமுதிக துனை செயலாளர் சுதிஷ் பேட்டி இதில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், "தமிழ்நாடு அரசு சொத்து வரியை உடனடியாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து மொழியையும் கற்போம், அன்னை மொழி காப்போம் - எல்.கே. சுதீஷ் முழக்கம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையைக் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், தற்போது வரை குறைக்காமல் உள்ளனர். மாநகராட்சி, நகராட்சிகளில் சாலை வசதிகள், பாதாளச் சாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திவிட்டு தான் வரியை உயர்த்த வேண்டும்.
ஆனால் தமிழ்நாடு அரசு எதையும் செய்யாமல் வரியை உயர்த்தி உள்ளது மிகவும் தவறு. தேமுதிகவைப் பொருத்தவரை அனைத்து மொழிகளையும் கற்போம் அன்னை மொழி காப்போம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'பெண் உறுப்பினர்களுக்கு மட்டும் பதவியில் உரிமை; கணவர்களுக்கு உரிமை இல்லை என்பதை உறுதி செய்க' - பிரேமலதா விஜயகாந்த்