இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து மடலில்,
தோழர் என்.சங்கரய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து ! - sangarayya
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவரான தோழர் என்.சங்கரய்யாவின் பிறந்தநாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவரான தோழர் என்.சங்கரய்யா நேற்று (15.7.2019) தனது 98ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தலைசிறந்த கொள்கை வீரரான அவரது பொதுவாழ்வின் லட்சியப் பயணம் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்துதான் தொடங்கியது. அது பிறகு கம்யூனிசத்தில் பூத்துக் காய்த்து, கனிந்து பழுத்த பழமாகி இன்றும் தனித்த உயரத்தில் நிற்கிறது!
எத்தனை எத்தனைப் போராட்டங்கள்!
எவ்வளவு எவ்வளவு சிறைவாசங்கள்!
எல்லாம் அவரது லட்சிய வெற்றிக்குப் போடப்பட்ட உரங்கள். அவரது எளிமையும், கொள்கை நெறிவாழ்வும் நமது இளைய தலைமுறை கற்றுக் கொண்டு பின்பற்றி ஒழுகவேண்டிய பாடங்கள்!
மதவெறி, சாதி வெறி, பண வெறி, பதவி வெறி - படமெடுத்தாடும் இன்றைய அரசியல் பொதுவாழ்வில் - இத்தகைய தலைவர்கள் குறிஞ்சி மலர்கள். கொள்கை ஜீவ நதிகள்!
மேலும் பல்லாண்டு வாழ்ந்து, வழிகாட்டும் நெறியாளராகத் திகழ்ந்து, அவரது நூற்றாண்டை நாம் கொண்டாடுவோம்!
வாழ்க தோழர் சங்கரய்யா! வருக புது உலகம்! என கூறப்பட்டுள்ளது.