தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சிம்பு வீட்டில் விரைவில் டும்டும்டும் - சிம்பு

சிம்புவின் சகோதரர் மற்றும் இசைமைப்பாளருமான குறளரசன் திருமணம் குறித்து அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிம்பு

By

Published : Mar 7, 2019, 11:46 PM IST

பன்முக திறமை கொண்டவர் நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர். இவருக்கு சிலம்பரசன், குறளரசன் என்ற மகன்களும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.மூத்த மகன் சிலம்பரசன் தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்கிறார். இளையமகன் குறளரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் ஆசிர்வாதத்துடன் சென்னையில் உள்ள மசூதிக்கு சென்று இஸ்லாமிய மதத்துக்கு மாறினார்.

இதையடுத்து, இஸ்லாமிய வகுப்பை சேர்ந்த பெண் ஓருவரை காதலிப்பதால்தான் அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாக தகவல் பரவியது. இதை உறுதி செய்யும் வகையில் குறளரசனுக்கு ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்பு

இந்த திருமணத்தில் இரு தரப்பினரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பங்குபெறும் தனிப்பட்ட விழாவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், குறளரசன் திருமணம் குறித்து டி.ராஜேந்தர் விரைவில் முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ராஜேந்தர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருக்கும் குறளரசன், சிம்பு மற்றும் நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'இது நம்ம ஆள்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ABOUT THE AUTHOR

...view details