நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாங்குநேரித் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட முடிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்வு இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த உறுப்பினரான குமரி அனந்தன் கலந்துகொண்டு விருப்பமனுவை பெற்றுக்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாங்குநேரி தொகுதி நெல்லையில் முக்கியமான தொகுதி. நான் தனியாக அமைப்பு வைத்து நடத்திவந்த வேளையில் அவ்வமைப்பின் சார்பாக வின்சென்ட் என்பவரை நாங்குநேரி தொகுதியில் நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்றோம்.
விருப்பமனுவை பெற்ற குமரி ஆனந்தன் அதேபோல் கடந்த தேர்தலில் எனது தம்பி இந்த தொகுதியில் வெற்றி பெற்று அந்த மக்களுக்கு தொண்டு செய்தார். இவ்வாறு எனது மனதுக்கு நெருக்கமான இந்த தொகுதியில் நான் போட்டியிட விரும்பி விருப்பமனுவை பெற்றுள்ளேன்.
நான் ஏற்கனவே நான்கு முறை சட்டப்பேரவஒ உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், கூட்டணி கட்சி தலைவர்களும் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்வார்களேயானால் தொகுதியில் கடுமையாக உழைத்து தேர்தலில் வெற்றி பெறுவேன் " என்றார்
இதையும் படிங்க: நாங்குநேரி இடைத்தேர்தல்: நெல்லையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!