தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமலாலயத்தில் அறிவாலய கதிர்கள்: வரவேற்ற அண்ணாமலைக்கு அழைப்பு! - அண்ணாமலை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்வில் பங்கேற்குமாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளனர் துணை சபாநாயகரும், அரசின் கொறடாவும்.

அண்ணாமலைக்கு அழைப்பு
அண்ணாமலைக்கு அழைப்பு

By

Published : Jul 29, 2021, 11:49 PM IST

இன்று (ஜூலை 29) மாலை தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி செழியன் ஆகியோர் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில்கே. அண்ணாமலையைச் சந்தித்தனர்.

அண்ணாமலைக்கு அழைப்பு

அப்போது, வரும் இரண்டாம் தேதி சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு அழைப்பிதழை வழங்கி, அந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அவருடன் பாஜக மாநிலத் துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி உடன் இருந்தார்.

அண்ணாமலைக்கு அழைப்பு

இது குறித்து அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டியும் திமுகவின் கொறடா கோ.வி. செழியனும் @BJP4TamilNaduஅலுவலகத்தில் அழைப்பிதழ் வழங்கினர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details