இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு துணை முதலமைச்சருடைய மகன் ரவிந்திரநாத் குமார் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டார். ஆனால், அதைத் தடுப்பதற்குத் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதன் மூலம் அங்கு பாரபட்சமாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டது” என குற்றம்சாட்டியுள்ளார்.
மறுவாக்குப்பதிவைத் தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்: கே.எஸ். அழகிரி - re election
சென்னை: மறுவாக்குப்பதிவு நடத்துவதைத் தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் எவருக்கும் முன் அறிவிப்பு இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏன் கொண்டு வரப்பட்டது? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசியல் கட்சிகளின் ஆலோசனை இல்லாமல் 13 மாவட்டங்களில் உள்ள 15 மக்களவைத் தொகுதியில் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் எந்த அடிப்படையில் முடிவெடுத்துள்ளார் என்பதை விளக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், “மறுவாக்குப்பதிவை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே,மறுவாக்குப்பதிவு நடத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்” என அந்த அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.