தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜ்யசபா சீட் கேட்ட காங்கிரஸ்... கைவிரித்த ஸ்டாலின் - திமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்ட காங்கிரஸ்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் இடமளிப்பது குறித்து ஸ்டாலினிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் இடம் வழங்க வாய்ப்பில்லை என்று கூறியதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ks azhagiri pressmeet
ks azhagiri pressmeet

By

Published : Mar 6, 2020, 7:10 PM IST

சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவின் முதல் பொதுக்கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஒடுக்குகிறது. போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு அரசியல் கட்சிகள் சென்றாலே அலையவேண்டியுள்ளது.

தன்னெழுச்சியாக அமைதியான முறையில் மக்கள் போராடும்போது, அனுமதி பெறுவது கடினம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கே.எஸ். அழகிரி பேட்டி

ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸுக்கு திமுக இடம் கொடுப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், ” காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையும் ராஜ்யசபா தேர்தலில் இட பங்கிட்டுக்கொள்வது குறித்து எந்த உடன்படிக்கையும் செய்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர்தான் திமுகவிடம் இடம் கேட்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தனர்.

அதன்பேரில், நாங்கள் திமுக தலைவரிடம் கேட்டதற்கு, அவர் இம்முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். அடுத்தத் தேர்தலில் யோசிப்போம் என்றும் அவர் கூறினார்” என்றார்.

இதையும் படிங்க:'ஸ்டாலின் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்'

ABOUT THE AUTHOR

...view details