தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 19, 2019, 10:06 PM IST

ETV Bharat / state

"சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணமானவர்களை அரசு காப்பாற்றக்கூடாது": கே.எஸ். அழகிரி காட்டம்!

சென்னை: பேனர் விழுந்து விபத்தில் மறைந்த சுபஸ்ரீயின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை அரசு காப்பாற்ற நினைத்தால் அதை விட கொடுமை உலகத்தில் வேறு எதுவுமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

ks alagiri

சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எ.ஸ் அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் ஆகியோர் சென்று, அவர்களது பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பேனர் விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை அரசு காப்பாற்ற நினைத்தால் அதை விட கொடுமையானது வேறொன்றுமில்லை. இறப்பில் கூட வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. குற்றம்சாட்டப்பட்ட நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது தவறு.

கே.எஸ்.அழகிரி சுபஸ்ரீ குடும்பத்தை நேரில் சந்தித்தார்

உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும், விசாரிக்கப்பட வேண்டும். தண்டனை என்பது வேறு. குறைந்தபட்சம் கைது நடவடிக்கைக்கோ அல்லது விசாரணைக்கோ அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதை கூட இந்த அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை செய்யவில்லை என்றால் அவர்கள் யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக படிக்க: சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details