தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா வருகை '23ஆம் புலிகேசி' படத்தில் வரும் நகைச்சுவை போல் இருக்கிறது - கே.எஸ் அழகிரி - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி

சென்னை: சசிகலா வருகை '23ஆம் புலிகேசி' படத்தில் வரும் நகைச்சுவை போல் இருக்கிறது என்று கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

Congress party
Congress party

By

Published : Feb 10, 2021, 1:43 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சமூக ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்யும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நேற்று தொடங்கப்பட்டது.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், " ரஜினி சொன்னது போல தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை. மோடி அரசாங்கம் செயல் இழந்த அரசாங்கம். எடப்பாடி அரசு தோல்வி அடைந்த அரசாங்கம். மோடி ஒரு கேள்வி கேட்டால் அவர் பதில் சொல்லாமல் மீண்டும் நம்மை கேள்வி கேட்பார். இன்னும் சொல்லப்போனால் அவர் இதுவரை செய்தியாளர்களை கூட சந்திக்கவில்லை.

சசிகலா வருகை '23ஆம் புலிகேசி' படத்தில் வரும் நகைச்சுவை போல் இருக்கிறது. மத்திய அரசு அனைத்து பொருட்களிலும் வரி வசூலித்து விட்டது இனிமேல் எதில் வரி வசூல் வசூலிப்பது என்பது தெரியாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர். இதன் மூலம் வரி வசூலித்து மத்திய அரசு வருமானத்தை கூட்டிக் கொள்கின்றனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கே.எஸ் அழகிரி செய்தியாளர் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details