தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வேளாண் சட்டத்தைப் போல நீட் தேர்வும் அகலும்" - திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற பின்னர் கே.எஸ்.அழகிரி கருத்து! - Chennai News in tamil

DMK Launches Anti-NEET Signature Campaign: திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றதைப் போல, நீட் தேர்வும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 8:26 PM IST

சென்னை:தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் நீட் தேர்வுக்கு (NEET Exam) எதிராக சத்தியமூர்த்தி பவனில் இன்று (நவ.3) கையெழுத்துகளைப் பெற்றார். இதில், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி, 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று, சேலம் இளைஞரணி மாநாட்டில் அதை சமர்ப்பித்து, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அதை அனுப்பி வைப்பதுதான் எங்களுடைய இலக்கு. ஆன்லைன் வழியாக தங்களது கையெழுத்தைப் பதிவு செய்யலாம். இதுவரை, 3 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளோம்.

அதுபோல், 10 லட்சம் அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டு, இதுவரை 8 லட்சம் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்துப் பெற்றுள்ளோம். இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். தொடர்ந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலைவர்களையும் சந்திக்க இருக்கிறேன்" என்றார்.

மேலும், "காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகள் இருக்கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி என்று பல அணிகள் உள்ளன. அதுபோல, பாஜகவின் ஒரு அணிதான் வருமான வரித்துறை. இந்தத் துறைகள் எல்லாலாம் பாஜகவினுடைய அணிகள்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து, கே.எஸ்.அழகிரி கூறுகையில், 'நீட்க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறார். பெரும் ஆதரவு அதற்கு இருக்கிறது. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்து பெறப்படுள்ளது. நட்பு ரீதியாக இங்கு வந்து கையெழுத்து பெற்றுள்ளார். இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக நான் பார்க்கிறேன். இந்த மக்கள் இயக்கம் வெற்றி பெரும். வேளாண் சட்டம் திரும்பப் பெறப்பட்டது போல், நீட்டும் திரும்பப் பெறப்படும். உதயநிதியை தமிழ்நாடு காங்கிரஸ் பாராட்டுகிறது' என்று நம்பிக்கை கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மக்களை ஏமாற்றவே திமுக 'கையெழுத்து இயக்கம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details