சென்னை:இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா தொற்று பரவியது முதல் அதை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தெளிவற்ற கொள்கைகளை பாஜக நடைமுறைப்படுத்தி வருகிறது. தடுப்பூசி அளிப்பதில் இதுவரை மூன்றுவிதமான கொள்கைகளை அறிவித்துள்ளது. தொடக்கத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கிற முதன்மை பொறுப்பு ஒன்றிய அரசுக்குதான் இருக்கிறது என பல முறை தெரிவித்தது.
ஆனால், பாஜக அரசு அந்த பொறுப்பை மாநில அரசின் தலையில் சுமத்திவிட்டு அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டது. அதற்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக மாநில அரசுகளுக்கு தேவைப்படுகின்ற தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. அதிலும், பாரபட்சமாகவே பாஜக அரசு செயல்படுகிறது.