தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரி, தருமபுரி பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போதே வருமானம்! - chennai news

ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு பாலிடெக்னிக் மாணவர்களை அதிகளவு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் படிக்கும் போதே வருமானம் பெறும் வகையில் புதிய பட்டயப்படிப்பும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போதே வருமானம்..
பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போதே வருமானம்..

By

Published : Apr 13, 2023, 7:24 PM IST

சென்னை:ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு பாலிடெக்னிக் மாணவிகளை அதிக அளவு சேர்க்கத் திட்டமிட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் படிக்கும்போதே வருமானம் பெறும் வகையில் புதியப் பட்டயப் படிப்பும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பாலிடெக்னிக் பட்டயப் படிப்பினை முடிக்கும் மாணவர்கள் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் பாடத் திட்டத்தில் வரும் கல்வியாண்டில் இருந்து மாற்றம் கொண்டுவரப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகளில், ’’தொழிலகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மாணவர்களுக்கு கல்வி பயிலும் பொழுதே தங்களின் தகுதியை மேம்படுத்தி வருமானம் ஈட்டும் வகையில் ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை,

கெலமங்கலம் அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியிலும், தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மூன்றிலும் மாணவர்கள் படிக்கும் போதே வருமானம் ஈட்டும் பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்’’ என அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் டாடா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய Digital manufacturing technology எனும் புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போதே வருமானம்

இந்தப் படிப்பிற்கு வரும் கல்வியாண்டில் 300 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. வரும் ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் தேவையும் அதிகரிக்கும். இந்த பட்டயப்படிப்பு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அதன் தொழிற்சாலையில் பணிபுரிய பத்தாயிரம் பாலிடெக்னிக் படிப்பை முடித்தவர்கள் வேலைக்குத்தேவை என தெரிவித்து உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற மாணவிகளை வேலைக்கு எடுக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்து உள்ளது. மாணவர்கள் படிக்கம் பொழுதே டாடா நிறுவனத்தில் பணியிடை பயிற்சியும் மற்றும் உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது.

படித்து முடித்து வேலை வாய்ப்பை பெறக்கூடிய வகையில் புதிய பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதலில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 300 மாணவர்கள் வரும் கல்வியாண்டில் சேர்க்கப்பட உள்ளனர். அதனைத்தொடர்ந்து வரும் ஆண்டுகளில் பிற மாவட்டங்களிலும் இந்தப் படிப்பு விரிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அதிகாரி தெரிவித்தார்.

இதையும் படிங்க:"ஏலே..! நாங்களும் பட்டம் வாங்குவோம்" புளியங்குடி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!

ABOUT THE AUTHOR

...view details