சென்னை: ராமேஸ்வரம் வட்டம் தங்கச்சி மடம் கிராமத்தில் உள்ள ஏகாந்த ராமசாமி கோயிலில் இருந்த பழமையான கிருஷ்ணர் சிலை உட்பட ஆறு சிலைகள் கடந்த 1966ஆம் ஆண்டு திருடப்பட்டு விட்டதாக கோயிலின் பொறுப்பாளர் நாராயணி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ பிரென்ச் நிறுவனத்திடம் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெற்றனர். ஏகாந்த ராமசாமி கோவிலில் கந்தர்வ கிருஷ்ணா, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, விஷ்ணு உட்பட ஆறு சிலைகள் காணாமல் போய் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பெறப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களின் இணையதளங்களை சோதனை செய்தனர். அப்போது அமெரிக்காவில் உள்ள இந்தியானா போலீஸ் என்ற அருங்காட்சியகத்தில் நடனமாடும் கிருஷ்ணர் சிலை இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.