சென்னை: கொங்குநாடு குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியின் கருத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் இடம்பெறவில்லை.
கேபி முனுசாமி கருத்து
கொங்குநாடு சர்ச்சை குறித்து அனைத்து அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நேற்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த கேபி முனுசாமியிடம் இது குறித்து கருத்து கேட்டபோது, "கொங்குநாடு என்ற பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது போன்ற விஷமனத்தனமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும், இது போன்ற மாநில பிரிவினைவாத கருத்துகளின் போது மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்" என்று கூறினார்.