கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வீடுகளில் டெலிவரி செய்ய 7305050541, 7305050542, 7305050543, 7305050544 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது.