தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை.. வியாபாரிகள் மகிழ்ச்சி..!

சென்னை: பல்வேறு கட்டுப்பாடுகளை கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Koyambedu
Koyambedu

By

Published : Sep 28, 2020, 11:29 AM IST

கரோனா தொற்றின் மையம் எனக் கூறப்பட்ட கோயம்பேடு சந்தை மூடப்பட்டு பல மாதங்களுக்கு பின்னர் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று (செப்டம்பர் 28) திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நேற்று (செப்டம்பர் 27) முதலே வெளியூர்களில் இருந்து காய்கறிகள் லாரிகள் மூலம் வரத்தொடங்கிய நிலையில் தற்போது காய்கறிகள் மொத்த விற்பனை கடைகள் 200 கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு விதித்துள்ள நெறிமுறைகள் முற்றிலும் கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில் அடுத்தடுத்து கடைகள் செயல்பட சி.எம்.டி.ஏ நிர்வாகம் அனுமதிக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையின் அனைத்து நடவடிக்கைகளும் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணிப்பு செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details