சென்னைஎன்றாலே பல கட்டடங்கள், அடையாளங்கள் உள்ளன. அதில் கோயம்பேடு பேருந்து நிலையமும் ஒன்றாகும். மற்ற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குத்தான் பயணிகள் வருகின்றனர்.
இதனால், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. அதனைக் குறைக்கும்விதமாக மேம்பால கட்டுமான பணி நடைபெற்றுவந்தது. எனினும் கட்டுமான பணி பல காரணங்களால் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
1 கி.மீ. தொலைவு மேம்பாலம்
பிறகு 2016 ஆம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பணி இன்னும் முடிக்கப்படவில்லை. இதனால் சென்னை மாநகரப் போக்குவரத்துப் பேருந்துகள், வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் கடும் போக்குவரத்து நெரிசலைச் சந்தித்துவருகின்றன.
இதனால் இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசலாகக் காணப்படும். இதனைக் கருத்தில்கொண்டு மாநில நெடுஞ்சாலை (மெட்ரோ பிரிவு) ஒரு கிலோ மீட்டர் தொலைவில், அதாவது ஜவஹர்லால் நேரு (100 அடி) சாலையிலிருந்து காளியம்மன் கோயில் தெரு (விளக்கு) வரை நான்கு அடி மேம்பாலத்தை கட்ட 2011ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.93.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. "இத்திட்டத்தின்படி, 1,055 மீட்டர் (1.55 கி.மீ.) அளவில் நான்கு அடி மேம்பாலம் அமைக்கப்படும். இந்த மேம்பாலத்தில் பேருந்துகளைத் தவிர மற்ற வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும்.
கட்டுமான பணி தாமதம்
இதனால் மாநகரப் பேருந்துகள் எளிதில் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்துக்குள் சென்று வெளியே வரலாம்" என்றார் நெடுஞ்சாலைத் துறை அலுவலர். கோயம்பேடு பேருந்து வளாகத்தின் வெளியே சில போக்குவரத்துக் காவலர்கள் மேம்பால கட்டுமான பணி தாமதமாவதை ஒப்புக்கொண்டனர்.
"இந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. போக்குவரத்து சிக்னல்கள் இருந்தாலும், சில வாகன ஓட்டிகள் விதிமீறி போகின்றன. இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால், காவல் துறைக்கும் வேலைப்பளு குறையும்" எனக் காவலர் ஒருவர் தெரிவித்தார்.
மாநகரப் பேருந்து ஓட்டுநர்களும் இந்த நெரிசலைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். "இந்த மேம்பாலம் கட்டும் முன்பு போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கியவுடன் நெரிசல் ஆரம்பித்தது. மேம்பால கட்டுமான பணியை விரைவாக முடிக்க வேண்டும்" எனப் பேருந்து ஓட்டுநர்கள் புலம்புகின்றனர்.
கட்டுமான பணியைத் துரிதப்படுத்துக
இது குறித்து சமூக ஆர்வலர் பி. விஸ்வநாதன் கூறுகையில், "சென்னையில் கோயம்பேடு மேம்பாலம் மட்டுமல்ல. ஒரு சில மேம்பாலங்கள் கட்டுமான பணி பாதியுடன் நிற்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு அரசு கட்டுமான பணியைத் துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.
இதுபற்றி, நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் நம்மிடம் தொலைபேசி வாயிலாகப் பேசுகையில், "சுமார் 90 விழுக்காடு கட்டுமான பணி நிறைவடைந்துவிட்டது. இந்த மாத இறுதியில் கோயம்பேடு மேம்பாலம் திறக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதிகப் போக்குவரத்து நெரிசலால் பகலில் கட்டுமான பணி பெரும்பாலான நாள்களில் நடைபெறவில்லை.
கட்டுமான பணியைத் துரிதப்படுத்துக காவல் துறையிடம் அனுமதி, சுற்றுப்புறச்சூழல் சான்றிதழ் பெற காலதாமதம் ஆகியது. கட்டுமான பணி இரவு நேரங்களில் மட்டும் நடைபெற்றதால் பணி நிறைவடையாமல் இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: 'தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குக'