பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
கூடங்குளம் அணு உலையை ஹேக் செய்தது யார்? - வைகோ கேள்வி - கூடங்குளத்தை ஹேக் செய்தது யார்
சென்னை: கூடங்குளம் அணு உலையில் கணினிகள் முடங்கப்பட்டதால் ஆபத்துகள் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கணினிகள் முடக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய அணுசக்திக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பேசிய அவர், "கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கியதிலிருந்தே எனது எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துவருகிறேன். இதனை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் போராடிவருகின்றனர்.
கூடங்குளம் அணு உலையில் கணினிகள் முடங்கியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆபத்துகள் ஏற்படுமோ என்ற கேள்வி எழுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கணினிகள் முடக்கப்பட்டது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசு மற்றும் அணுசக்தித் துறையின் கடமை" எனத் தெரிவித்தார்.