தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைனில் வெளியான 'கொம்பு' - காவல் ஆணையரிடம் படக்குழு புகார்! - காவல் ஆணையரிடம் திரைப்பட தயாரிப்பாளர் புகார்

சென்னை: தான் தயாரித்த 'கொம்பு' திரைப்படம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியானது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் புகார் மனு அளித்துள்ளார்.

kombu
kombu

By

Published : Dec 15, 2020, 6:12 PM IST

தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் என்பவர் தனது ஶ்ரீசாய்சீனிவாசா பிக்சர்ஸ் மூலம் 'கொம்பு' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் டிவி புகழ் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

காவல் ஆணையரிடம் கொம்பு படக்குழு புகார்

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் தயாரித்து வெளியிட்டுள்ள கொம்பு திரைப்படத்தை சில சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.

சுமார் நான்கு கோடி ரூபாய்வரை செலவு செய்து எடுக்கப்பட்ட படம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் எனக்கு ஐந்து கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே காவல் ஆணையர் தயவுகூர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details