தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர்கள் சந்திப்பு

சென்னை:அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக, எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதையொட்டி நடிகர்கள் சிலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

By

Published : Oct 11, 2020, 7:50 AM IST

நடிகர்கள்
நடிகர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக, எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவரை சந்தித்து பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று(அக்.10) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சிங்கமுத்து

இதில் சின்னத்திரை நடிகர் சங்கத்தை சேர்ந்த ரவி வர்மா, நிர்வாகிகள், திரைப்பட நடிகர் சிங்கமுத்து உள்ளிட்டோர் சென்றனர்.

சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகரும், இயக்குநருமான மனோபாலா, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வடகிழக்குப் பருவமழை: முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details