தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் உடல் மீட்பு - சென்னை செய்திகள்

கொளத்தூரில் தூக்கில் தொங்கியபடி இளம்பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

kolathur-young-lady-sucide-police-doubted-his-death
தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் உடல் மீட்பு: கொலையா? தற்கொலையா

By

Published : Jul 6, 2021, 8:05 AM IST

சென்னை:சென்னை மாதவரம், பொன்னியம்மன் மேடு, வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் மஞ்சு(20). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால், இவரது தங்கை சரண்யாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. சரண்யாவுக்கும், அவரது கணவர் கார்த்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒன்றரை வயது குழந்தையுடன் சரண்யா மஞ்சுவுடன் வசித்துவந்தார்.

இந்நிலையில், கார்த்திக் சரண்யாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். சரண்யா வரமறுத்ததால், சரண்யாவின் அக்கா மஞ்சுவை அடித்து தனது இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி கொளத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார்.

இந்நிலையில், மஞ்சு கார்த்திக்கின் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கொளத்தூர் காவல்நிலைய காவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மஞ்சுவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மஞ்சுவை கார்த்திக் எதற்காக அடித்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார், மஞ்சு தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா எனபது தொடர்பாக கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

ABOUT THE AUTHOR

...view details