சென்னை: கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜீவா நகர் மற்றும் பாரதி நகர் பகுதிகளை சேர்ந்த இளைஞர்களிடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்த தகராறு குறித்து பாரதி நகர் பகுதியினரை, 30 ஆண்டுகளாக ஜீவா நகர் பகுதி ஊராட்சி தலைவராக இருந்த பாஸ்கரன் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாரதி நகரை சேர்ந்த முருகன் என்பவர், ஊராட்சி தலைவரான பாஸ்கரனை கத்தியால் குத்தியதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த சம்பவம் குறித்து ஆர்.கே. நகர் காவல் நிலையம் வழக்கு, சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.