சென்னை கொடுங்கையூரில் நிறுவப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2014 - 15ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கொடுங்கையூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
அதனடிப்படையில் இந்தத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலும் இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இதன் மூலம் 45 மில்லியன் லிட்டர் நீரும், கோயம்பேட்டில் 45 மில்லியன் லிட்டர் நீரும், நேசப்பாக்கத்தில் 10 மில்லியன் லிட்டர் நீரும் என நாள் ஒன்றிற்கு 110 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நீர் கிடைக்கும். இயற்கை பருவ நிலை பொய்த்தாலும் 876 மில்லியன் லிட்டர்நீர் வழங்க அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை பைப் லைன் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிருஷ்ணா நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் நீர் தேக்கத்துக்கு வந்தடையும்.