சென்னை: கொடுங்கையூர் எம்.ஆர் நகர் அழகேசன் தெருவில் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை உள்ளது. இந்த நிலையில் இன்று (பிப்.4) காலை அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கியில் இருந்த யுபிஎஸ் கருவியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, புகை மண்டலமாக மாறியதாக கூறப்படுகிறது. வங்கியில் இருந்த அலாரம் ஒலித்ததால், அங்கிருந்த காவலாளி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
கொடுங்கையூர் BOI வங்கிக் கிளையில் திடீர் தீ விபத்து!
சென்னை கொடுங்கையூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கொடுங்கையூர் BOI வங்கியில் திடீர் தீ விபத்து!
இவ்வாறு கிடைத்த தகவலின் பேரில் வியாசர்பாடி, வ.உ.சி நகர் மற்றும் எஸ்பிளனேடு ஆகிய 3 பகுதிகளைச் சார்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டது காலை நேரம் என்பதால், வங்கியில் எந்தவிதமான பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படவில்லை என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நடுவானில் பறந்த விமானத்தில் தீ.. ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!