சென்னை:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளியை கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயன், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.
இவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு, நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.